தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இலங்கை குண்டுவெடிப்பு... ஐ.நா. தலையிட வேண்டும்' - -thirumavalavan

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

By

Published : Apr 21, 2019, 10:41 PM IST

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் நட்சத்திர விடுதிகளின் மீதும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் உலகத்தை அதிர வைத்துள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மிகக் கடுமையாக விமர்சித்தும் உள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், 'ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்புப் போர் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுவந்தன. இலங்கையிலுள்ள பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்கும் பயங்கரவாதிகளே இந்தத் தாக்குதல்களில் பின்னால் இருந்தனர் என்பதை செய்திகள் புலப்படுத்தி வந்தன.

நீண்டகால யுத்தத்திற்குப் பிறகு சற்றே அமைதி திரும்பிக் கொண்டிருந்த அந்த நாட்டில் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதை உணர்த்துகிறது. திட்டமிட்டே சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னால் பேரினவாத சக்திகள் இருக்கக்கூடும் என்ற ஐயம் எழுகிறது.

இவ்வளவு பெரிய தாக்குதலைக் கண்டறிந்து தடுக்கும் வல்லமை கொண்டதாக இலங்கை அரசு இல்லாத நிலையில் அங்கே அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details