சென்னையில் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கவிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் எந்தவித நோய்களும் பரவக்கூடாது என்ற நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியிலுள்ள பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீரில் கொசுக்கள் பரவாமல் இருப்பதற்காகவும், கால்வாயில் ஆங்காங்கே உள்ள செடிகளில் இருக்கும் கொசு முட்டைகளை அழிப்பதற்காகவும் ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றன.
மனிதர்களால் சென்று மருந்து அடிக்க முடியாத இடங்களில் இந்த ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கிவைத்தார்.