சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று இரவு 8:30 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் காலதாமதமாக இரவு 10 மணிக்கு புறப்பட தயாரானது.
விமானத்தில் கோளாறு - உயிர் தப்பிய 183 பேர்! - technical issue
சென்னை: கொச்சி செல்லயிருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 183 பேர் உயிர் தப்பினர்.
அந்த விமானத்தில் 177 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் செல்ல தொடங்கியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தால், அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்பு, விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 4.30 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 1:30 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாற்றை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.