தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன தணிக்கையின்போது காவலருக்கு கால் முறிவு! - Guard leg fracture during vehicle inspection

சென்னை: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் மோதியதில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

காவலர் கால் முறிவு
காவலர் கால் முறிவு

By

Published : Jul 26, 2020, 9:21 AM IST

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், ஜிஎஸ்டி சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் ஒருவர் அதிவேகமாக வந்து இரும்பு தடுப்பில் மோதி, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் மீது மோதினார்.

இதில், ஹரிகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயமும், வலது கால் முறிவும் ஏற்பட்டது. அதேபோல் வாகனத்தை ஓட்டி வந்த மடிப்பாக்கம் மூவரசம்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கடையின் பூட்டை உடைத்து 17 செல்போன்கள் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details