சென்னை: சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் மாலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பெரம்பூர், ஆவடி, காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. அதேபோல் அங்கிருந்து மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு சென்னை வருகிறது.
சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக மறுநாள் 12.10 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
மைசூரு செல்லும் ரயில், இரவு 9.15 மணிக்கு எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர். பெங்களூரு, மாண்டியா வழியாக மறுநாள் காலை 6.40 மணிக்குச் செல்லும். இந்த ரயில் சேவைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.