Competitive examination: தமிழ்நாட்டிலிருந்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜெஇஇ, நீட் போன்ற மத்திய அரசின் போட்டித் தேர்வினை எழுதி ஐஐடி போன்ற உயர்தொழில் கல்வி நிறுவனங்களில் சேராமல் உள்ளனர். மேலும் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு பயிற்சி அளித்துவருகின்றன.
தற்பொழுது பள்ளிக் கல்வித் துறை ஆணையராக உள்ள நந்தகுமார் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்கள் போட்டித் தேர்வினை எழுதுவதற்குரிய பயிற்சியளித்து மருத்துவம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கில வழியில் தலா 40 பேர் வீதம் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவரும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.