கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மக்கள் தேவை அதிகம் உள்ள, வழக்கமாக ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் கிளோன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், தனாப்பூர் ரயில் நிலையத்துக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர், பிரயாக்ராஜ் ரயில் நிலையங்கள் வழியாக தனாப்பூர் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.