ரயில்வே தேர்வு வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு! - தெற்கு ரயில்வே
ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தெற்கு ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, இதற்காக நெல்லூரில் இருந்து ஜூன் 11ஆம் தேதி, காலை 7.05க்கும் புறப்படும் சிறப்பு ரயில் ( ரயில் எண் 07675), மதியம் 3.15க்கு சேலத்தை அடைகிறது. மறுமார்க்கமாக,சேலத்திலிருந்து இரவு 8:30க்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:30க்கு ஆந்திராவின் நெல்லூரை அடைகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் வரும் மாணவர்கள் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளும்படி, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:வைகாசி விசாகத்திருவிழா: மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கம்!