தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2022, 7:07 PM IST

ETV Bharat / state

எல்கேஜி, யூகேஜி வகுப்பிற்கு சிறப்பாசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தகவல்

மழலையர் பள்ளிகளில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்துள்ளார்.

பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி
பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி

சென்னை:10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதை சென்னையில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு முதல் 2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் நடப்பாண்டில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத்தொடர்ந்து மீண்டும் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டபின்னர் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'ஒரு மாதத்துக்குள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார். அதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாக' தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி அறிவிப்பில்லாமல் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இன்று வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளி ஆய்வுப்பலகையில் ஒட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைப் பரிசோதித்தார். மேலும் பள்ளியில் உள்ள சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார். மாதிரிப் பள்ளியில் உள்ள மழலையர் வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்காெண்டார். அப்போது மழலையர் பள்ளிகளில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி

இதையும் படிங்க:கண்டுகொள்ளாத அரசு: முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து ஊர் மக்களே அரசுப்பள்ளியை புனரமைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details