சென்னை:அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டமே போக்சோ சட்டம். இந்த சட்டத்தை எவ்வாறு எந்த வகையில் அனுகுவதென்று இன்று வரையிலும் காவலர்கள் சிலருக்கு போதிய விழிப்புணர்வுகள் இல்லை. பின்பு போக்சோ சட்டம் பற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்க மனம் ஆழ்த்துகிறது. எடுத்துச் சொல்லுபவர்களுக்கே அதைப்பற்றிய விவரங்கள் தெளிவு படாதா வேலையில், சாமனிய மக்களின் தெளிவு எந்நிலையில் இருக்கும் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், போக்சோ சட்டம் குறித்து சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கத்தை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இலக்காகும் குழந்தைகள்:சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் கூட, ஏதும் அறியாத குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், குழந்தைகள் உடல்ரீதியாக பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானாலும், அவர்கள் அதை எப்படி வெளியில் தெரியப்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வுகள் இல்லை.
ஒருவர் தவறான நோக்கத்தில் தொடுவதை கூட தவறு என உணர முடியாமல் குழந்தைகள் இருப்பதால், சிலரின் எளிதான இலக்காக குழந்தைகளே முதலிடத்தில் இருக்கின்றனர். மேலும், இந்தியாவில் அதிகமாக பாலியல் சீண்டல்களுக்கு பெண் குழந்தைகளே பாதிக்கப்படுவதாக தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
போக்சோவின் அறிமுகம்:தொடரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் 2012 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் The Protections Of Childrens from Sexual Offences act 2012 என்று அழைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் தொல்லைகள் மற்றும் வன்கொடுமைகளை முழுமையாக நீக்கி பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.
சட்டம் சொல்லும் தண்டனை:
- போக்சோ சட்டம் 3 மற்றும் 4ன் கீழ், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சமாக 7 ஆண்டுகளும், குற்றத்தின் தன்மையை நீதிமன்றம் தீவிரமாக கருதினால் ஆயுள் தண்டனையும் வழங்கலாம்.
- சட்டம் 5 மற்றும் 6ன் படி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது பெற்றோர், பொறுப்பாளர், ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கும்.
- சட்டம் 7 மற்றும் 8ன் படி குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது போன்ற குற்றங்களுக்கு குறைந்த பட்சமாக 3 ஆண்டுகளும், அதிகபட்சமாக 8 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.
- சட்டப்பிரிவு 9 மற்றும் 10ன் படி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் பெற்றோர், பொறுப்பாளர், ஆசிரியர் மற்றும் காவலராக இருந்தால் குறைந்த பட்சமாக 5 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.
- சட்டப்பிரிவு 11 மற்றும் 12ன் படி சைகை மூலமாக பாலியல் தொல்லை அளிப்பது, ஆபாசமாக பேசுவது, பாலியல் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவது, தொலைபேசியில் அழைப்பது ஆகிய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.
- சட்டம் 13 மற்றும் 14ன் படி குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பது, அதை விற்பது, இணையதளங்களில் வெளியிடும் குற்றத்திற்கு குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.
கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் அதிகமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இங்கே மாற வேண்டியது மனிதர்களா? இல்லை சட்டங்களா? சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்.