இந்திய நாட்டின் 73ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா மகிழ்ச்சியில் சுதந்திர தினத்தை கொண்டாட கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளை வாங்க கடைகளில் குவிகின்றனர் மக்கள்.
விற்பனையில் களைகட்டும் பிளாஸ்டிக் அல்லாத தேசிய கொடிகள்! - பிளாஸ்டிக் இல்லாத தேசியக் கொடி
சென்னை: விற்பனையில் களைகட்டுகிறது பிளாஸ்டிக் அல்லாமல் உருவாக்கப்பட்ட தேசிய கொடிகள், தோரணங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த தேசிய கொடிகளை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக விற்பனையாளர் ஜாஹிர் உசேன் கூறுவதாவது, "விலை குறைவாக கொடித் தோரணங்கள் விற்பதனால், மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து அவற்றை வாங்கிச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பேன்சி ஸ்டோர்கள் போன்ற கடைகளில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட கொடிகள் தவிர்க்கப்பட்டு துணிகள், பேப்பர்களினால் உருவாக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.