தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு விருதுகள் - முதலமைச்சர் தகவல் - காவலர்களுக்கு விருது

சென்னை: காவல் துறையினரை ஊக்குவிக்க அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

tn assemble today
tn assemble session

By

Published : Aug 31, 2021, 3:27 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக பா.ம.க சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி நேரத்தின்போது, “காவலர்கள் மக்கள் பாதுகாப்பு பணியிலும், தடுப்பு பணியில் ஈடுபடும்பொழுது அவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே காவலர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்க அரசு நடவடிக்கை வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்,

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இது குறித்து பரிசீலித்து ஆய்வு செய்து அவர்களுக்கு தகுந்த முறையில் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம்: பயனடைந்தது எத்தனை பேர்?

ABOUT THE AUTHOR

...view details