தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், "வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23 ஆம் நிதி ஆண்டில் தலா ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு தொழில்தொடங்க தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அத்துடன்விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற, இரண்டு ஆயிரத்து 500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கடந்த ஆண்டைப் போலவே 2022-23ஆம் ஆண்டிலும் வழங்கப்படும். குறிப்பாக இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளித்து, பாராட்டி வருகிறது. அதேபோல இந்தாண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்