கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள கோயில்களை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்குத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பூஜைகள் நடத்தக் குழு அமைக்கக் கோரி மனு - இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு! - Hindu Religious and Cultural Affairs
சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவங்கள், பூஜைகள் நடத்தக் குழு அமைக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கக்கோரி சுவாமி ரங்கநாதர் கோயில் சார்பில், ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், 'ஊரடங்கு நேரத்தில் கோயில் திறக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளபோதும், பூஜைகள், உற்சவங்கள், சடங்குகள் நடத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மேலும், கோயிலின் மதம் சார்ந்த விவகாரங்களில் அறநிலையத்துறை ஆணையரும், கோயில் இணை ஆணையரும் தலையிடத் தடை விதிக்க வேண்டும்’ எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க அறநிலையத் துறைக்கும், கோயில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:காவலரை கத்தியால் குத்திய காவலாளிக்கு 5 ஆண்டு சிறை