சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 2001-2002ஆம் கல்வியாண்டில் 3ஆவது பருவத்தில் சேர்ந்த மாணவர்கள், கடந்த 2002-2003ஆம் ஆண்டில் முதல் பருவத் தேர்வில் சேர்ந்த மாணவர்களில், பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்குச் சிறப்புத் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர், 2020 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என, சின்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு! - பொறியியல் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு
சென்னை: கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
![பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு! அண்ணாப்பல்கலைக் கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7485062-thumbnail-3x2-che.jpg)
அதைத்தாெடந்து மாணவர்கள் தேர்விற்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்ட அறிவிப்பில்," தற்போது நிலவி வரும் கோவிட்-19 சூழ்நிலையால் மாணவர்களுக்கு, ஏற்கனவே 2020 ஏப்ரல், மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'குழந்தை தொழிலாளர்களுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்!