தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 3:54 PM IST

ETV Bharat / state

வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறப்பு அலுவலர்

சென்னை: கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரத்தில் வைரஸ் தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரிண் எண்ணிக்கை 13 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக சென்னையில் உள்ளது. சென்னையில் இந்த வைரஸால் இதுவரை எட்டாயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னை மாநகராட்சி கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் சோதனையில் நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது.

கரோனா சோதனையில் முன்னோடியாக திகழம் சென்னை

இந்நிலையில், சென்னை மண்டலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியான ராயபுரத்தில் வீடுதோறும் சென்று சளி காய்ச்சல் இருக்கிறதா என்று கணக்கு எடுக்கும் பணியை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details