நடிகர் சங்கம் தொடர்பான இரு வழக்குகள் இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அலுவலராக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.
மேலும், 3 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் வெறும் 3 உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனி அலுவலரை நியமித்தது தவறானது எனவும் நடிகர் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர், பொருளாராக இருந்த கார்த்தி, சிறப்பு அலுவலர் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.