தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம் முழுவதும் நாளை 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - செங்கல்பட்டு வெள்ளம் பாதிப்புகள்

Tamil Nadu Health camp: தமிழ்நாட்டில் நாளை 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்க உள்ளதாகவும், அதில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டுமெனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 3:49 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.9) 3,000 மருத்துவ மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது எனவும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி முதல் தற்போது வரைவாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் கடந்த 6 வாரங்களில்இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை (9.12.2023) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களிலும், அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் 500 முகாம்களும், திருவள்ளுர் மாவட்டத்தில் 200 முகாம்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 முகாம்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 முகாம்கள் என்று 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் நாளைநடைபெறும் 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும்' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மிதக்கும் சென்னை.. மீள்வது எப்போது? வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details