கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக பிரச்னை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிற நோய்கள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை அளிக்கும் பொழுது பலனளிக்காமல் உயிரிழக்கும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அரசு, தனியார் மருத்துவர்கள், மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவர்களைக் கொண்டு 11 வகையான சிறப்பு மருத்துவக் குழுக்களை அரசு உருவாக்கியுள்ளது. அவை பின்வருமாறு...
- டயாலிசிஸ், உறுப்பு மாற்று சிகிச்சைப் பெற்றவர்களுக்கான குழு
- நீரிழிவு நோயாளிகளுக்கான குழு
- ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கான குழு
- புற்றுநோய் சிகிச்சைப் பெறுபவர்களுக்கான குழு
- கர்ப்பிணி தாய்மார்களுக்கான குழு
- குழந்தைகள், ரத்தம் உறைதல் நோயாளிகளுக்கான குழு
- இருதய நோயாளிகளுக்கான குழு
- மூத்த குடிமக்களுக்கான குழு
- காசநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு
- மனநலம் காப்பதற்கான குழு
தற்போது உள்ள சூழ்நிலையில் கரோனா தொற்றில் இருந்து சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை செய்துதர இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.