சென்னை: சிறை கைதிகள் புத்தகத்தை படித்து மறுவாழ்வு அடையும் விதமாக தமிழ்நாடு சிறைத்துறை சார்பில், சென்னை புத்தக கண்காட்சியில் "சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர்" என்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் கொடுத்து அவற்றை அவர்கள் நாள்தோறும் வாசிப்பதன் மூலம் மனரீதியில் ஏற்படும் இழுக்குகளையும் வெகுளி தன்மையையும் குறைக்க முடியும் என சிறை துறை நம்புகிறது.
சென்னை புத்தக கண்காட்சியில் சிறைவாசிகளுக்கு புத்தக தான அரங்கம் - சென்னை மாவட்ட செய்தி
சென்னை புத்தக கண்காட்சியில் "சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர்" என்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
46ஆவது சென்னை சர்வதேச புத்தகக் காட்சிகள் அரங்கு எண் 286இல் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பாக சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை படிக்க தூண்டும் வகைகள் இந்த புத்தக கண்காட்சி அமைந்துள்ளது. சிறையில் உள்ள சிறைவாசிகள் படிப்பறிவுடன் இந்த உலகை அறிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகங்கள் அவர்களிடம் சென்றடைந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதையில்லா தமிழ்நாடு தீம்: 500-க்கும் மேலான வின்டேஜ் பைக்குகளில் பேரணி