இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே மாதம்17ஆம் தேதிவரை நீடித்தது. மேலும் பன்னாட்டு, உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
தமிழ்நாட்டில் சிக்கிய வெளிநாட்டு பயணிகள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகள் சிறப்பு விமானம் மூலம் அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகளை சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 323 பேர் சென்னையிலிருந்து கொழும்புவிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். அதே போல் மஸ்கட்டுக்கு புறப்பட்ட விமானத்தில் 31 பேர் பயணம் செய்தனர்.