இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 31ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் இதனால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. எனவே இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாட்டிற்கு சுற்றுலா வந்த பயணிகளை மீண்டும் அழைத்து செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மேலும் தங்கியுள்ள வெளிநாட்டு நாட்டு பயணிகளை சிறப்பு விமானங்கள் முலம் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தங்கியிருந்த சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள், சென்னையிலிருந்து சென்ற சிறப்பு விமானத்தில் 13 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 140 பேர் புறப்பட்டு சென்றனர்.
அதுபோல வங்கதேசம் நாட்டிற்கு சென்ற விமானத்தில் 11 குழந்தைகள், 87 பெண்கள் உள்பட169 பேர் சென்றனர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூர், வங்காளதேசத்திற்கு சிறப்பு விமானங்கள்!
சென்னையிலிருந்து சிங்கப்பூர், வங்கதேசத்திற்கு 2 சிறப்பு விமானங்கள் 309 பேருடன் புறப்பட்டு சென்றது.
சென்னை விமான நிலையத்தில் குவிந்து காணப்படும் மக்கள்
இதையும் படிங்க:விமான சேவை தடைகளை நீக்கிய உள் துறை!