சென்னையில் நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து அனைத்து காவல் அலுவலர்களும்,காவல் ஆய்வாளர்களும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் புயலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தொடங்கி கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை: தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை - சென்னை
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Nivar
அதுமட்டுமின்றி மாநகராட்சி, வருவாய் துறை,மின்சார வாரியம்,குடிநீர் வாரியம் போன்ற துறையினரோடு காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு உதவி புரிய தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், சென்னை முழுவதும் தனி பயிற்சி பெற்ற காவல் குழுவினர்,பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களோடு தயார் நிலையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.