சென்னையில் கரோனா பரவல் வேகம் அதிகளவில் உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும், பொதுமக்களின் நடமாட்டத்தை பல இடங்களில் காண முடிகிறது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபடடுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு உதவ, புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் சரோஜினி தலைமையிலான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 044- 23452221 என்ற எண்ணை முதியவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.