சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்விதமாகவும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 24 மணி நேரமும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோருக்காக மாதவரம், கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட ஐந்து பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் இந்த ஐந்து பேருந்து நிலையங்களுக்கும் எளிதாகச் சென்றுவருவதற்காக இன்று (ஜனவரி 11) முதல் 13ஆம் தேதிவரை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 24 மணி நேரமும் இயங்கும் 310 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மாநகரப் பேருந்துகளின் விவரங்கள் மாநகரப் பேருந்துகளின் விவரங்கள் இதையும் படிங்க: 9 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து போக்குவரத்து