தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமரா - சென்னை காவல் ஆணையர்!

அதிவேகமாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிய 367 ஜங்ஷனில் பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

By

Published : Mar 1, 2022, 9:33 PM IST

சென்னை : கோடைகாலத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரி ஈவேரா சம்பத் சாலை சிக்னலில் நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று முதல் அடுத்த 4 மாதங்களுக்கு இரண்டு வேளை, போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் வழங்க உள்ளதாகவும், இதற்காக ஆண்டுதோறும் 30 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் போக்குவரத்து காவல்துறைக்கு உடல் ரீதியான பிரச்னை ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சாலை மாற்றத் திட்டங்களை அந்தந்த காவல் மாவட்டத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் வகுத்து கொள்ளும் முறையைக் கொண்டு வரவுள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு

மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடியிருப்பு வாங்கித்தருவதாக மோசடிப் புகார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அந்தப் புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது. நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களைக் கண்டறிய 367 ஐங்ஷனில் பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களைத் தயாரிக்கும் கடைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை

பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்கக்கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டிச்சென்றால், அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

கரோனா காலத்தின் போது பிரீத் அனலைசர் கருவி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பிரீத் அனலைசர் கருவி மூலமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது 150 வழக்குகள் வரை போடப்பட்டுள்ளன. லோன் ஆப் மோசடியைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் 4 சைபர் காவல் நிலையங்கள் வரவுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details