மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஆட்டிசம் என்னும் அறிகுறியுடன் இருக்கும் பிள்ளைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் பூந்தமல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்டது.
இதனைத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலிகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஆட்டிசம் குறைபாடு உள்ள ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் கண்டறியப்பட்டு இந்தப் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் அவர்களை மீட்டெடுக்க முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு 14 மாவட்டங்களில் இதுபோல் பயிற்சி மையம் தொடங்கியுள்ளது" என்றார்.
சென்னையில் ஆட்டிசம் குறைபாட்டிற்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மேலும், இதுவரை 46 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆறு வயதுக்குள் கண்டுபிடித்தால் அதன் வீரியத்தைக் குறைக்க முடியும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.