தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - chennai latest news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

special-camp-to-add-name-to-voter-list
special-camp-to-add-name-to-voter-list

By

Published : Sep 14, 2021, 8:36 PM IST

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ”தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக ஜனவரி 1ஆம் தேதி 2020ஆம் ஆண்டு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் உரிய ஆவணங்களுடன் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் தேர்தல் ஆணையரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான அன்னே ஜோசப் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ”வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை படிவம் 6, 6A, 7, 8, 8A மூலம் மேற்கொள்ளலாம். வாக்கு சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீட் தேர்வு மரணங்களுக்கு திமுகவே காரணம் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details