தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - Devotees going to Velankanni

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By

Published : Aug 25, 2022, 10:20 PM IST

சென்னை:இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்குப் பயணிக்க மொத்தம் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகப்பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும்; அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீரே வராத கண்மாயைத் தூர்வாரியதாக ரூ.4.50 லட்சம் கணக்கு... மாயமான திட்டப்பலகை

ABOUT THE AUTHOR

...view details