தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்பட 324 பேருக்கு தடுப்பூசி! - தடுப்பூசி முகாம்

சென்னையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்பட 324 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Special Booster Vaccine camp  Booster Vaccine camp  Booster Vaccine camp at dgp office  Special Booster Vaccine camp at dgp office  டிஜிபி அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்  பூஸ்டர் தடுப்பூசி முகாம்  தடுப்பூசி முகாம்  முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்
Booster

By

Published : Jan 13, 2022, 11:02 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஜன.12ஆம் தேதி நடைபெற்றது.

இதில் முதலாவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பூஸ்டர் தடுப்பூசிசெலுத்திக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து 324 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக முன்களப்பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details