தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது' - திருச்சி சிவா! - trichy siva delta Agricultural Zone

சென்னை: எண்ணெய் கிணறு, புதிய தொழிற்சாலைகள் அமைக்காமல் இருந்தால் மட்டுமே அது முழுமையாக வேளாண் மண்டலமாக இருக்க முடியும் என, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

special Agricultural Zone can be protected by not giving that space for oil well and other industries trichy siva
திருச்சி சிவா

By

Published : Feb 12, 2020, 5:01 PM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தாலும் அதை சட்டரீதியாக அங்கீகரித்து தேவையான நடவடிக்கை எடுப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. எண்ணெய் கிணறுகள், புதிய தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளும் அப்பகுதியில் அமைக்காமல் இருந்தால் மட்டுமே முழுமையாக வேளாண் மண்டலமாக இருக்க முடியும்.

இதுகுறித்து மாநிலங்களவையில் 267ஆவது விதியின்கீழ் மற்ற விவாதங்களை எல்லாம் ஒத்திவைத்து இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சி, 340 எண்ணெய் கிணறுகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளை உடனடியாக ரத்து செய்தால்தான் இந்த அறிவிப்பு உண்மையாக இருக்கும்.

ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது குறித்து கேள்விக்கு, நல்ல முறையில் ஆட்சி செய்தால் மக்கள் அங்கீகாரம் தருவார்கள். அது தான் டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணம். இந்த வெற்றி ஒரு நல்ல ஆட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது என்றார்.

திருச்சி சிவா பேட்டி

இதையும் படிங்க:டெல்டா விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details