இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலம் பயணிகள் பலர் வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 3ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதையடுத்து பன்னாட்டு, உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்லமுடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளிலிருந்து சுற்றுலா வந்த பயணிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.