சென்னை: சட்டப்பேரவையில் தீர்மானங்களைத் தொடர்ந்து, அமைச்சர்களின் கேள்வி நேரங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை ரீதியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது திடீரென குறிக்கிட்டு பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தொடர்ந்து 2 நாட்களாக அவையில் என்னுடைய துணைக் கேள்விகள் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். அவையில் அவருடைய வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், அவைத்தலைவரின் இந்த செயலுக்கு அவர் ஆவேசமாக கத்தினார்.
மேலும் தன்னுடைய துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி, தமிழக வாழ்வுரிமை பெற்ற தலைவர் வேல்முருகன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்து அவையில் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்தார்.