சென்னை: நிர்வாக குறைபாடுகளால் தான் தமிழ்நாட்டில் மின் வெட்டு நிலவி வருவதாகவும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது எனவும் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
இதற்கு போதுமான அளவு நிலக்கரியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்குவதில்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ”கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தேவை அதிகமாக இருக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்றபின்பு தான் மின் வெட்டு அதிகரித்துள்ளது.