தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க - சபாநாயகர் நகைச்சுவை பேச்சு - கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க - சபாநாயகர்

வனத்துறை ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.32 கோடி செலவில் 256 மின்சார இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்ய உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க என சபாநாயகர் தெரிவித்ததால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.

speaker-appavu-ask-minister-ramachandran-to-buy-fireproof-electric-bike கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க - அமைச்சரை நக்கல் அடித்த சபாநாயகர்
speaker-appavu-ask-minister-ramachandran-to-buy-fireproof-electric-bikeகொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க - அமைச்சரை நக்கல் அடித்த சபாநாயகர்

By

Published : Apr 26, 2022, 10:15 AM IST

சென்னை:சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று (ஏப்ரல்.25) வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை வழங்கிய அமைச்சர் கா. ராமச்சந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு வனத் துறையின் முன்னோடி முயற்சியாக ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இருசக்கர வாகனங்களைக் கொள்முதல் செய்து வழங்க உள்ளது என தெரிவித்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, கொஞ்சம் தீ பிடிக்காத பைக் வாங்கி கொடுங்க என தெரிவித்தார்.

சபாநாயகரின் நகைச்சுவையால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், தீ பிடிக்காத இரு சக்கர வாகனம் வாங்கப்படும் என தெரிவித்து, புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து வாசித்தார்.

இதையும் படிங்க: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டது வேதனை - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details