தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்தில பேசாதீங்க.. தமிழ்ல பேசுங்க.. ப்ளீஸ்!" - ஏ.ஆர்.ரஹ்மான் அன்புக் கட்டளை! - ரஹ்மான் இந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்

தனியார் விருது விழாவில் தன் மனைவியிடம் இந்தியில் பேச வேண்டாம் என ஏ ஆர் ரஹ்மான் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

AR Rahman
AR Rahman

By

Published : Apr 27, 2023, 11:00 AM IST

சென்னை : தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், மேடையில் பேச இருந்த தன் மனைவியிடம், "இந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்" என அன்புக் கட்டளையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். ஏ ஆர் ரஹ்மானுடன் அவரது மனைவி சைரா பானுவும் கலந்து கொண்டார். விழாவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு இசை அமைத்ததற்காக ஏ ஆர் ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது.

விழா மேடையில் ஏ ஆர் ரஹ்மானுடன், அவரது சைரா பானு ஏறிய நிலையில் இருவரும் விருதை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ஏ ஆர் ரஹ்மான் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது பேசிய ஏ ஆர் ரஹ்மான், தான் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய பேட்டிகளை மனைவி சைரா பானு மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்பார் என்றும் அது குறித்து கேட்கும் போது தனது குரலுக்காக அவர் பார்ப்பதாக தெரிவித்ததாகவும் ஏ ஆர் ரஹ்மான் கூறினார்.

இதையடுத்து, சைரா பானு மேடையில் பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட ஏ ஆர் ரஹ்மான், "இந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்" என அன்புக் கட்டளையிட்டார். இதை கேட்ட ரசிகர்கள் கூச்சல் கும்மாளம் போட்டனர். அரங்கமே சில விநாடிகளுக்கு வாண வேடிக்கை நிகழ்ந்தது போல் காட்சி அளித்தது.

தொடர்ந்து பேசிய சைரா பானு, தனக்கு தொடர்ச்சியாக தமிழில் பேச இயலாது என்றும் அதற்கு மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டார். விழா மேடையில் ஏ ஆர் ரஹ்மான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவுக்கு கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசை அமைப்பில் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் நாளை (ஏப். 28) திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ ஆர் ரஹ்மான் - சைரா பானு தம்பதிக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதிஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களுக்கு இசை அமைத்து இருந்தாலும் ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழ் மொழி மீது தனி ஈடுபாடு இருப்பது உலகம் அறிந்த தகவல். 6 முறை தேசிய விருது, இரண்டு முறை கிராமிய விருது, பாப்டா விருது, கோல்டன் குலோப் விருது, 15 முறை பிலிம் பேர் விருதுகளை ஏ ஆர் ரஹ்மான் பெற்று இருந்தாலும் அவரது கலை சேவையை பாராட்டி கடந்த 2010 ஆனம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Karnataka Elections 2023 : தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி - வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details