தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடனுக்குடன்: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு! - எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை நிலவரம்

SPB health status
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை நிலவரம்

By

Published : Sep 25, 2020, 12:12 PM IST

Updated : Sep 26, 2020, 2:38 AM IST

13:53 September 25

திருவள்ளூர் மாவட்டத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் காலையில் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. நுங்கம்பாக்கத்தில் இருந்து எஸ்பிபியின் உடல் மாலை 7 மணியளவில் புறப்பட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு வந்தடைந்தது.

முன்னதாக அவரது மகன் சரண் பண்ணை வீட்டுக்கு வந்தார். தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இரண்டு கிலோ மீட்டர் முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர்.  

பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பி உள்பட 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணி முதல் திரைப்பிரபலங்கள், பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தி அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மணி முதல் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான பணிகள் தொடங்கி 12 மணி அளவில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அரசு மரியாதையும் அவருக்கு செய்யப்படவுள்ளது.

12:03 September 25

பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடல்

திருவள்ளூர் மாவட்டத்தின் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

10:57 September 25

திருப்பதி எம்எல்ஏ சற்றுமுன் மலர் அணிவித்து மரியாதை செய்தார். 

10:28 September 25

எஸ்பிபியின் உடல் அவரது பண்ணை வீட்டுக்கு சென்றடைந்தது. 

10:10 September 25

பாலு இனி இல்லை என்ற உண்மையால் நான் சோகமாக இருக்கிறேன். அவர் ஒரு புகழ்பெற்ற பாடகர் மட்டுமல்ல, எனக்கு மிக நெருக்கமான தோழர். ஆழ்ந்த பாசத்துடன் என்னைக் கட்டிப்பிடிக்கும் ஒரு சகோதரர்.

அவரது குரல் இசை உலகத்திற்கு கிடைத்த சிறந்த பரிசு. அவரது 50 ஆண்டு திரைப் பயணத்தில் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் பரவசமான பொக்கிஷங்கள். அவரது இனிமையான இசை, பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டு, அவருடன் கழித்த நல்ல நேரங்கள் நம்மை கண்ணீரில் ஆழ்த்துகின்றன. 

துக்கமான இந்த நேரத்தில் நாம் சொற்களை இழந்துவிட்டோம். பாலு ... இது உங்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி என்று, நமது ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் தெரிவித்துள்ளார்.

09:00 September 25

எஸ்பிபியின் உடலுடன் செல்லும் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். தற்போது வாகனம் செங்குன்றத்தை கடந்து செல்கிறது.

08:31 September 25

எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஜியின் இசையைக் கேட்பது எப்போதும் பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகரில் இருந்து அவர் எழுதிய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

08:28 September 25

ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசையும், உலகமும் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு சிறந்த பாடகராக என்னை வழிநடத்தியதற்கு அவருக்கு (எஸ்பிபி) நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நீங்கள் இல்லாமல் ஒரு கச்சேரியைப் பற்றி சிந்திக்க முடியாது. சாவித்ரியம்மா, சரண், பல்லவி மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல், பிரார்த்தனைகள் என்று பாடகி கே.எஸ்.சித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

08:18 September 25

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள அவரது பண்ணை வீட்டில், நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், நாளை(செப்.26) பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

இருப்பினும், மறைந்த எஸ்பிபியின் உடலை ஒரு மணி நேரமாவது பார்வையிட, தங்களை அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

07:42 September 25

எஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

07:17 September 25

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

06:15 September 25

தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக, அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பிபி அவர்களின் இறுதிப் பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழ்நாடு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

06:11 September 25

எஸ்பிபியின் உடல் இரவு 9 மணியளவில் நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் நாளை (செப்.26) பிற்பகல் இறுதி சடங்கு நடைபெறும் என, எஸ்பிபியின் உறவினர் தெரிவித்துள்ளார்.

05:28 September 25

இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என, நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

05:24 September 25

உங்கள் குரல் எங்கள் இதயத்திலும் ஆன்மாவிலும் என்றென்றும் எதிரொலிக்கும். உங்களை காணவில்லை SPB ஐயா. உங்கள் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என, இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

05:08 September 25

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோட்டிலுள்ள பண்ணை வீட்டில் நாளை (செப்.26) காலை 11 மணியளவில் மறைந்த எஸ்பிபியின் உடல்  நல்லடக்கம் செய்யப்படுகிறது. தற்போது, அப்பகுதியில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

04:31 September 25

எஸ்பிபியின் மறைவுக்கு, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

04:23 September 25

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோட்டிலுள்ள பண்ணை வீட்டில் நாளை (செப்.26) காலை 11 மணியளவில் மறைந்த எஸ்பிபியின் உடல்  நல்லடக்கம் செய்யப்படுகிறது. தற்போது, அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் ஏதும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

04:05 September 25

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார்.

03:56 September 25

இனிமையான குரல், இசை  மூலமாகவும் எஸ்பிபியின் நினைவுகள் என்னென்றும் இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

03:45 September 25

எஸ்பிபியின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ரசிகர்கள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

03:37 September 25

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

03:24 September 25

எஸ்பிபியின் மறைவு இசை உலகிற்கு ஒரு இருண்ட நாளாகும் என, நடிகர் சீரஞ்சிவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

03:20 September 25

இசை உலகிற்கு எஸ்பிபியின் மறைவு பேரிழப்பு ஆகும் என நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

03:15 September 25

எஸ்பிபி.யின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

03:10 September 25

ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்குக் கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய்

அழுகிறேன் என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

03:06 September 25

தேமதுதரத் தமிழோசை ஓய்ந்தது. திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன. திரு SPB யின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

03:02 September 25

எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு. எஸ்.பி.பி மறைந்தாலும், அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

02:59 September 25

பாடகர் எஸ்.பி.பியின் குரல் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

02:58 September 25

எஸ்.பி பாலசுப்ரமணியம் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையிசையுலகில் கோலோச்சியவர் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

02:56 September 25

எஸ்.பி.பி.யின் மறைவு, இந்திய இசைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

02:53 September 25

எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது என, எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.

* "பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது" * குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

02:49 September 25

இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது என  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

02:47 September 25

எஸ்பிபியின் மறைவுக்கு நடிகை அதிதீ ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்

02:40 September 25

எஸ்பிபி.யின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.  என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்துள்ளீர்கள். உங்களின் குரலும், நினைவுகளும் எப்போதும் என்னுடன் நீங்காது இருக்கும். "ஐ ட்ரூலி மிஸ் யூ" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

02:30 September 25

எஸ்பிபி பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழிகளில் எஸ்பிபியின் பாடல், மில்லியன் மக்களின் இதயங்களை தொட்டுள்ளது. அவரது குரல் எப்போதும் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

01:49 September 25

எஸ்.பி.பியின் மறைவு ஒரு பேரழிவு என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 


 

01:44 September 25

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்துவதாகவும்; ஒரு மெல்லிய பின்னணி குரல் உடைய சகாப்தமே மறைந்துவிட்டதாகவும் நடிகர் விஷால் வேதனை தெரிவித்துள்ளார். 

01:41 September 25

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்விட்டரில் பதிந்த நினைவலைகள்... 

01:37 September 25

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு - அதிகாரப்பூர்வ தகவல்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது. 

01:29 September 25

எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன், 'அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

00:52 September 25

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சரியாக நண்பகல் 1 மணி 4 நிமிடத்திற்கு இயற்கை எய்தியதாக, அவரது மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

00:07 September 25

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ' எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு அற்புதமான கலைஞன். கடந்த 50 ஆண்டுகாலமாக எனக்கு மிகச்சிறந்த நண்பர். எஸ்.பி.பிக்காக தொடர்ந்து பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை. கரோனா குணமடைந்த நிலையிலும் நுரையீரல் தொற்று குணமடையவில்லை' என வேதனையுடன் பேசினார். 

23:48 September 24

இயக்குநர் வெங்கட் பிரபு மருத்துவமனைக்கு எஸ்.பி.பியைக் காண மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். 

23:46 September 24

எஸ்.பி.பி மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகள் பல்லவி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். 

12:05 September 25

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரைக் காண இயக்குநர் இமயம் பாரதிராஜா வந்துள்ளார். 

Last Updated : Sep 26, 2020, 2:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details