இதுதொடர்பாக அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில்,சென்னை மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கையர் கரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 300 வீடுகளுக்கு சென்று நோய் தொற்று அறிகுறி குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்திருந்ததார்.
கரோனா தடுப்புப் பணிகளில் திருநங்கையர்: எஸ்.பி. வேலுமணி தகவல்! - கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் திருநங்கைகள்
சென்னை: சென்னை மாவட்ட கரோனா தடுப்பு பணிகளில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்புபணிகளில் ஈடுபட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள்: எஸ்.பி. வேலுமணி தகவல்
மேலும், அவர் இதனை கரோனா போர்வீரர்கள் என்ற ஹேஸ்டேக்கின் கீழ் பதிவிட்டார். கரோனா தமக்கு தொற்றி விடுமோ என்று சக மனிதர்களிடத்தில் பாகுபாடு காட்டும் பெரும்பாலோனோர் மத்தியில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் திருநங்கையர்கள் உண்மையிலேயே போர்வீரர்களே.
இதையும் படிங்க:விழாவை புறக்கணித்து சென்ற அமைச்சர் - அரசு அலுவலர்கள் அதிருப்தி