தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை - எஸ்.பி.சரண் - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

சென்னை : எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

By

Published : Aug 20, 2020, 7:08 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரின் உடல்நிலையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை அவரை மீட்டெடுக்க உதவும் என நம்புகிறேன்" என்றார்.

எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை - எஸ்.பி. சரண்

இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் தோனி - பிரதமர் மோடி புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details