பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது என தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுயநினைவு திரும்பிய பாடகர் எஸ்பிபி - SP Balasubrahmanyam health update
சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இந்நிலையில், பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதெனவும் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவருக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஜிஎஸ்டி வருவாய் மறுப்பு; மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்'- சோனியா காந்தி