இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தென்மேற்கு பருவமழை தாமதம்' - வானிலை ஆய்வு மையம் - தென்மேற்கு பருவமழை தாமதம்
சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில்தான் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
"கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மிகத் தாமதமாக தொடங்குவதால், தமிழ்நாட்டில் ஜூன் 2 வாரத்த்தில் தான் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக சுமார் 30 - 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரை நேற்றை விட இன்று, 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 37 டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியும் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.