இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை இன்று (ஜூன் 3) தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதியில் தொடங்கும் மழை சற்று தாமதமாக இன்று தொடங்கியது.
இதையொட்டி ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.