நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது சரக்கு ரயில்களும் தினந்தோறும் இயங்குகின்றன. சரக்கு ரயில்கள் மூலம் பொருட்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவா? - ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம்!
ஒரு எலியை பிடிப்பதற்கு ரூ.22 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்னக ரயில்வேக்கு தற்போது பெரிய பிரச்னையாக எலித்தொல்லை இருந்து வருகிறது. எலி மூலம் பல சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் எலியை பிடிப்பதற்காக ரூ.5 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒரு எலியை பிடிப்பதற்கு ரூ.22,334 செலவாகும் என்ற கணக்கையும் தென்னக ரயில்வே காட்டியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிக்கு இவ்வளவு செலவு செய்யும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை சீராக செய்து கொடுக்குமா என்ற கேள்வியே பலரது மனதிலும் எழுகிறது.
இதையும் படிங்க: தவறுதலாக எலி மருந்து சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு!