சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இதற்காக, வழக்கமாக இயங்கும் ரயில்களை விட பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக இம்மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் திருநெல்வேலி இடைய மூன்று சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - நெல்லை இடையே மற்றும் மறுமார்கமாக நெல்லை- சென்னை இடைய "கரீப் ரத்" என்ற வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும் சென்னை - நெல்லை இடையே நவ.8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை மட்டும் ) வாராந்திர சிறப்பு ரயில் (06051) இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும்.