தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணிகள் குறைவு காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து - தமிழ்நாடு கேரளா ரயில் ரத்து

சென்னை: பயணிகள் குறைவு காரணமாக ஏராளமான ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.

southern railway special trains
southern railway special trains

By

Published : May 6, 2021, 11:00 PM IST

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் ரயில்களில் மக்கள் பயணம் செய்வது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனையொட்டி, வரும் 8ஆம் தேதி முதல் ஏராளமான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும், சென்னை எழுப்பூர் - காரைக்குடி சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் முறையை 8 மற்றும் 9ஆம் தேதிகள் ரத்து
  • சென்னை எழுப்பூரிலிருந்து மதுரை செல்லும் 02613/4, 06157/8 மற்றும் 02635/6 ஆகிய ரயில்கள் ரத்து
  • சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் 02653/4 ரயிலும், நாகர்கோவில் செல்லும் ரயிலும் இருமார்கங்களிலிருந்தும் ரத்து
  • எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் செல்லும் ரயிலும், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து
  • தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் இருமார்கங்களிலும் ரத்து

மொத்தமாக தமிழ்நாட்டில் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு டூ கேரளா

தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் ரயில்களும் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில், இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் ரயில், இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி- பாலக்காடு டவுன் இடையே செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்துக்குள் இயக்கப்பட்டு வந்த 7 ரயில்கள், 8 முதல் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே நிர்வாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு டூ கர்நாடகா

தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் எம்ஜிஆர் சென்ட்ரல் - கேஸ்ஆர் பெங்களூரு வழித்தடத்தில் 2 சிறப்பு ரயில்களிலும், மங்களூரூ - சென்ட்ரல், மங்களூரூ சென்ட்ரல் - நாகர்கோவில் ஆகிய ரயில்களும் என ஒட்டுமொத்தமாக 4 ரயில்கள் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு டூ புதுச்சேரி

  • தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான சிரப்பு ரயில் 8ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

கேரளா - கர்நாடகா இடையிலான சிறப்பு ரயில்கள், தமிழ்நாடு திருப்பதி இடையிலான ரயில், எம்ஜிஆர் சென்ட்ரல் முதல் நிஜாமுதின் ரயில் நிலையம் சென்று வரும் ரயில், கேரளா முதல் டெல்லி சென்று வரும் ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதோடு மேட்டுப்பாளையம் கோவை, தாம்பரம் - விழுப்புரம், அரக்கோணம் - ஜோலார்பேட்டை, விருத்தாச்சலம்- சேலம், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உள்ளிட்ட 9 முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யஸ்வந்த்பூர் - ஹவுரா இடையே புதிதாக ரயில் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தமிழ்நாட்டிலிருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைப்பட்டால் மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என அரசு கோரும் நிலையில், பயணிகளின் வருகையை காரணம் காட்டி முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பணிகளுக்காகச் செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாத சூழல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details