கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு நாளை (மே 6) முதல் மே 20ஆம் தேதி வரை புதிய கட்டுபாடுகளை அமல்படுத்துகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க நாளை (மே 6) முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு - தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (மே 6) முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில்வே பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், நீதித் துறை பணியாளர்கள், வழக்குரைஞர்கள், இணைய விநியோக சேவை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக பெண்களுக்கு சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பயணிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.