சென்னை:பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளும், ரயில்களும் பயன்படுத்தி வரும் நிலையில் நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காகச் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (ஜன.13) மற்றும் நாளை மறுநாள் (ஜன.14) ஆகிய இரு தேதிகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 13 மற்றும் 14) ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்குப் புறப்படும் என தெரிவித்துள்ளது. மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என் தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.