தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைச்சர் என் பெயரைப் போட வேணாம்னு சொன்னாரா' - கொந்தளித்த ராதாரவி!

சென்னை: பெஃப்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தனது பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று நடிகர் ராதா ரவி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

fefsi
பெஃப்சி

By

Published : Feb 16, 2021, 10:59 PM IST

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு (பெஃப்சி), 2021 - 2023ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆர்‌.கே.செல்வமணி தலைவராகவும்‌, அங்கமுத்து சண்முகம்‌ பொதுச் செயலாளராகவும்‌, பொருளாளராக பி.என்‌.சுவாமிநாதனும்‌ மூன்றாவது முறையாகப் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கத்தில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நிர்வாகிகள், தொழிலாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதாரவியும் கலந்து கொண்டார். ஆனால், நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தன் பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராதாரவி, இதுதொடர்பாக தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் கேட்டுள்ளார். குஷ்பூ உள்ளிட்டோர் பெயர் எல்லாம் இருக்கிறது, என் பேரை மட்டும் ஏன் போடல எனக் கேட்டுள்ளார். இதற்கு ஆர்.கே. செல்வமணி பதில் பேசாமல் நின்றுள்ளார்.

பெஃப்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா

பின்னர் திடீரென, 'விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வரும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது பெயரைப் போட வேணாம்னு சொன்னாரா' எனக் கேட்க, பிரச்னை விஷ்வருபம் எடுத்தது. பின்னர், நிர்வாகிகளுக்குச் சால்வை அணிந்து விட்டு, அமைச்சர் வருவதற்குள் அங்கிருந்து ராதாதவி புறப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராதாரவி இல்லாமலே பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க:இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்று ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details