தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் குஷ்பு! - நாசர்
சென்னை: தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.
File pic
தலைவர் பதவிக்கு நாசரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ், பொருளாளராக நடிகர் கார்த்தி, பொதுச் செயலாளராக நடிகர் விஷால் போட்டியிட உள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகை லதா, நடிகை குஷ்பூ, கோவை சரளா, ஸ்ரீமான், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, பிரேம், அஜய் ரத்தினம், பிரசன்னா, பருத்திவீரன் சரவணன், ஆதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.