சென்னை: ரிப்பன் மாளிகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சென்னையின் காலநிலை மாற்றம் தொடர்பாக மேயர் பிரியாவை சந்தித்த பேசினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சௌமியா அன்புமணி,"காலநிலை மாற்றத்தின் அவசரநிலை தொடர்பாக பசுமைத்தகம் தான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். காலநிலையை அவசர நிலையாக பிரகடனப்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செயல் வரைவு திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட்டு பொது மக்கள் கருத்து தெரிவிக்க மேலும் இரண்டு மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். வரைவு செயல்திட்ட அறிக்கை தொடர்பாக விரிவான விளக்கங்கள் மாநகராட்சி வெளியிட வேண்டும்.
சென்னையில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இதனால் விரிவான திட்டம் தேவைப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்க்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல காலநிலை மாற்றம் தொடர்பாக மாநகராட்சி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.